முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: வருமான வரித்துறை தூங்குகிறதா?-சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,மே.- 18 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றதன் மூலம் பெற்ற பணத்துக்கு முறையான வருமான வரி செலுத்ததாது தொடர்பான விவகாரம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வரி ஏய்ப்பு விவகாரம் கடந்த 2008 ம் ஆண்டே தெரியவந்ததும் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர்தான் வருமான வரித் துறை விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. இவ்வளவு தாமதம் ஏன் என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர். வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் விவேக் தங்கா. இந்த தர்மத்தை நியாயப்படுத்தி வாதாடினார். மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் விசாரணையில் தடைகளை ஏற்படுத்தின என்று கூறினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களின் தகவல்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
எனினும் நீதிபதிகள் இந்த பதிலில் திருப்தியடையவில்லை. இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறினர். வருமான வரித்துறை குறிப்பிட்ட காலத்துக்குள் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் மீது முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. அமலாக்கத்துறை வருமான வரித்துறை ஆகிய மூன்றும் தங்களுக்கு இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்