முக்கிய செய்திகள்

இந்தியாவை எதிரியாக கருதுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்-நவாஸ் ஷெரீப் அட்வைஸ்

புதன்கிழமை, 18 மே 2011      உலகம்
Nawaz Sharif

இஸ்லாமாபாத்,மே.- 18 - இந்தியாவை மிகப் பெரிய எதிரியாக பாகிஸ்தான் கருதுகிறது. இப்படி கருதுவதையும் நடத்துவதையும் பாகிஸ்தான் முதலில் நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.  அண்டை நாடான இந்தியாவுடன் மீண்டும் நட்புறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்றும் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவுடன் கார்கில் போர் வெடித்த போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்தான் இந்த நவாஸ் ஷெரீப். இந்தியாவுடனான போர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் நவாஸ் ஷெரீப் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்களுடன் நவாஸ் ஷெரீப் கராச்சியில் கலந்துரையாடினார். அப்போதுதான் பாகிஸ்தான் அரசுக்கு அவர் சில அறிவுரைகளை கூறினார்.குறிப்பாக இந்தியாவை மிகப் பெரிய எதிரியாக கருதுவதை இஸ்லாமாபாத் உடனே நிறுத்த வேண்டும் என்றும் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: