இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை., டிச. 17 - அரசியல் பொருளாதார யதார்த்த நிலமைக்கு ஏற்ப, நாட்டின் மத்திய _ மாநில நிதி உறவுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று 14-வது நிதி கமிஷன் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். தமிழகத்திற்கு 41 ஆயிரத்து 408.79 கோடி நிதி தேவையை ஒதுக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
14_வது நிதி கமிஷன் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு 14_வது நிதி கமிஷன் தலைவர் டாக்டர் ஓய்.வி.ரெட்டி தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயலலிதா அதில் கலந்து கொண்டு, மாநிலத்தின் நிதி நிலைகள் குறித்தும், மாநிலத் தேவைகள் குறித்தும், தற்போது உள்ள மத்திய மாநில நிதி உறவுகள், மாநிலத்திற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி பங்கீட்டில் உள்ள குறைகள் போன்ற பல விஷயங்களை எடுத்து உரைத்தார்.
கூட்டத்தில் 14_வது நிதிக்குவின் உறுப்பினர்கள் பேராசிரியர் அபிஜித் சென், சுஷாமா நாத், டாக்டர் கோவிந்த ராவ், டாக்டர் கதிப்தோ முண்ட்லே, மற்றும் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களும், 14_வது நிதி கமிஷன் செயலாளர் ஏ.எம்.ஷா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மத்திய நிதிக்குழு உயர் அதிகாரிகள், தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_
14_வது நிதிக்குழுவின் தலைவர் மற்றும் நிதி கமிஷனின் சிறந்த உறுப்பினர்கள் ஆகியோரை நான் வரவேற்கிறேன். இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளவர்களை பார்க்கும் போது, தற்போதிய அரசியல் பொருளாதார நிலமைகளை புரிந்து கொண்ட, பொது நிதித்துறையின் சிறந்த அறிவு சார் திறமையாளர்கள் இணைந்து பங்கேற்கும் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. நிதிக்குழுவின் மீது தமிழகம் மிக உயர்ந்த மதிப்புகளையும், நம்பிக்கைகளையும் வைத்துள்ளது.
நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் நிறுவாகத்தை திறம்பட நடத்துவதற்காக வரிவருவாய் அதிகாரத்தை மத்திய அரசிடம் இருக்கக்கூடிய வகையில் அங்கீகரித்துள்ளனர். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதுகாப்பது, பொதுச்சேவை _ மக்களுக்கு சேவை ஆற்றுவது, பொது சுகாதாரம், விவசாயம், கல்வி, போன்ற பொதுமக்களோடு நெருங்கிய உறவுடைய சிலவற்றை மாநில அரசின் கையில் ஒப்படைத்துள்ளனர். நமது நாடு சுயேட்சையான சுதந்திரமாக இயங்குவதற்காக இது போன்ற பல விஷயங்களை அவர்கள் ஒருங்கிணைத்து உள்ளனர். இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, பல்வேறு பிராந்தியங்களில் உள்ள நிர்வாக அமைப்புகள் மற்றும் அப்போதிய அரசியல் சூழ்நிலைகளையொட்டி இந்த விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டு பிறிந்த சூழ்நிலைகள் பாதிப்புகள் இன்னமும் நீடிக்கிறது. சமஜ்த்தானங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசாக மாற்றியமைக்கப்பட்ட நினைவுகளை மாற்ற முடியாது. சமீபத்தில் தான் நாட்டை நிலை நிறுத்துவதற்கான தன்மைகள் முடிவடைந்தன.
கடந்த 63 ஆண்டுகால அரசியல் சட்டத்தை கடைபிடித்த பின்னர், சூழ்நிலைகள் மேலும சிறப்பாக மாறியுள்ளது. இந்தியா இப்போது, நம்பிக்கை உள்ள நாடாக மாறியபோது, ஜனநாயகத்தில் முதிர்ச்சி அடைந்த நாடாகவும் திகழ்கிறது. சந்தேகம் இல்லாத பொருளாதார சவால்கள் இன்னமும் தொடர்கிறது. ஆனால், அது வேறு மாதிரியாக, உணவு பாதுகாப்பு இல்லாமை, வறுமை அல்லது பல நூற்றாண்டு காலமாக இருந்த காலனிய ஆட்சியால் ஏற்பட்ட தலைகள் அதாவது நவீன தொழில் துறை அடிப்படை இல்லாத நிலமை போன்றவை இன்னமும் நீடிகிறது.
தாராள மயமாக்கும் கொள்கை, நேரிடை உற்பத்தியில் இருந்த பொதுத்துறையின் பங்களிப்பை குறைத்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்பானது தற்போது பொருளாதார கொள்கையை உருவாக்குவதில் மேலும், மேலும் சிறந்த பங்காற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சமூக பொருளாதர உள்கட்டமைப்பின் வளர்ச்சி உட்பட பொதுச்சேவை பணிகள் அதிகரிப்பால் மாநில அரசின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஏழைகளின் சமூக பாதுகாப்பிற்காக மாநில அரசு அதிகமாக செலவிடவேண்டி உள்ளது. முதலீட்டாளர்கள் தங்களுடைய தொழிலகத்தை நிறுவுவதில் மத்திய அமைச்சயகங்கள் அளிக்கும் லைசன்ஸ்களை பெற்றால் மட்டும் போதுமானது அல்ல. முதலீட்டாளர்கள் தொழிலகங்களை எங்கு அமைப்பது, எப்படி அமைப்பது, தரமான பொதுச்சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு, அதாவது சட்டம் ஒழுங்கு நிலமை, சட்டத்தின் மாட்சி, சிறப்பான கல்வி திறமை, ஆரோக்கியமான வேலை நிலமை, பணியாளர்களின் செயல்பாடு, நல்ல சாலைகள், மின்சாரம் மற்றும் பல்வேறு சேவைகள் உள்ளடங்கிய உள் கட்டமைப்பு வசதிகள் எங்கு இருக்கிறது என்பதை தேடி பார்த்து அங்கு அவர்கள் அவற்றை அமைக்கின்றனர். ஆகையால் மாநில அரசின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
இதில் தெக்க தெளிவாக தெரிவது என்னவென்றால், மாநிலங்களுக்கு தேவையான வளங்கள் அதிகரித்து உள்ளன என்பதுதான். மிகவும் முக்கியமாக பல்வேறு பொதுச்சேவைகளில் மாநிலங்கள் ஈடுபட வேண்டி உள்ளது. அவற்றை திறம்பட செயலாற்றுவதில் மாநிலங்களின் திறமைகள் அதிகப்படுத்த வேண்டி உள்ளது. இவ்விஷயத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவுத்திட்டம், வயதானவர்களுக்கு ஓய்வூதியத்திட்டம், இலவச அரிசியை தொடர்ச்சியாக அளித்துவரும் பொது விநியோகத்திட்டம் போன்ற சில உதாரணங்களில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
ஆனாலும், மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய அரசு, மாநிலங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்குவது இல்லை. அதில் வேறுபட்ட தன்மையுடன் பாகுபாடுடன் செயல்படுகிறது. நிதிக்குழுவின் மூலம் 54 சதவீத நிதி வளம்தான் மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. மற்றவை திட்ட உதவிகள் மற்றும் மத்திய அரசால் அளிக்கப்படும் திட்டங்களுக்காக அளிக்கப்படுகிறது. நிதிக்குழுவின் அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பது அரசியல் சட்டத்திற்கு உகந்தது அல்ல. மாநிலங்களுக்கு நிதி உதவி செய்யும் மத்திய அரசின் போக்கு மிகவும் மோசமாக உள்ளது. இத்தகைய பணப்பரிமாற்ற முறைகள் மாறும் என்று நான் நம்புகிறேன். வளர்ச்சி திட்டங்களில் மாநில அரசுகள் சம பங்காளிகளாக கருதப்படுவது இல்லை.
மத்திய அரசின் நிதித்திட்டங்களில் தமிழகம் சரியான முறையில் நிதியை தரவில்லை. 12_வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையின்படி 2011_ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி 5.96 சதவீதத்திற்கு பதிலாக 4.328 சதவீதம் தான் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக குறைந்த நிதியைத்தான் தமிழக அரசு பெற்றுள்ளது. இது மாநில அரசின் நிதி நிலமையை பாதித்தது மட்டுமல்லாமல் திட்டங்களை செம்மை செயல்படுத்துவதில் பாதிப்பை உருவாக்கி உள்ளது.
அரசியல் சட்டரீதியாக அமைக்கப்பட்ட நிதிக்குழுவின் பரிந்துரைத்தபடி மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதிக்கு குறைவாகவே தமிழ்நாடு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுகிறது. தமிழக அரசு மிகவும் குறைவாகவே பங்களிப்புகளை அதாவது உச்சநீதிமன்றம் உட்பட அரசியல் அமைப்பு சட்டவடிவங்களில் மட்டுமே சமத்துவ தன்மை இருக்கிறதே தவிர வேறு விஷயங்களில் அவை இல்லை.
இந்த வகையில் 14_வது நிதிக்குழு வரலாற்றின் திருப்பத்தில் இருக்கிறது. தற்போது அரசியல் பொருளாதார சூழலில் நாட்டில் மத்திய, மாநில நிதி உறவுகளில் சீரமைப்பை கொண்டு வரும் வாய்ப்பு, மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உங்களுடைய அணுகுமுறைகள் தன் வரம்பை சுறுக்கிக்கொள்வது மட்டுமல்லாமல் விரிவான சூழ்நிலைகளை எதார்த்தத்தில் ஆராயக்கூடியதாகவும் இந்த நிதிக்குழு இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மத்திய அரசு தரக்கூடிய வரிவாருவாயில் உரிய பங்குகளை அரசியல் சட்டம் 270_வது பிரிவின் படி அளிக்கவேண்டும். தற்போது 8 சதவீத அளவுக்குத்தான் மத்திய அரசின் வருவாயில் மாநில அரசுக்கு கிடைகிறது. அபரிவிதமான வளத்தை பெற்று வரும் மத்திய அரசு குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவுக்காவது மாநில அரசுக்கு தரவேண்டும். இது மாநில அரசின் செலவீனத் தேவைகளை ஈடுசெய்ய உதவும். பண பறிமாற்ற விஷயத்தில் நிதிக்குழுவின் பரிந்துரைகளும் மாறுதலுக்கு உள்ளாக வேண்டும். 7_வது நிதிக்குழுவின் போது இருந்த 7.2 சதவீத பரிமாற்றம், 13_வது நிதிக்குழுவின் 18.1 சதவீதமாக மாறியுள்ளது. இது வரவேற்க தகுந்தது அல்ல. இத்தகைய மானியங்களை நிருவகிக்கும் விஷயத்தில் மத்திய அரசு பாகுபாடுகளை காட்டுகிறது. சில நேரங்களில் மாநிலங்கள் போதுமான மானியங்களை பெறுவதில்லை. இவை மாற்றப்படவேண்டும் என்று நிதிக்குழுவிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் 270_வது பிரிவின்படி வரிமாற்ற வழிகளில் மாநிலங்களுக்கு அதிக நிதி அளிக்கப்பட வேண்டும். மாநிலங்களின் சிறப்பு தேவைகளுக்கு ஏற்ப சமஅந்தஸ்துடன் அரசியல் சட்டம் 275_வதின்படி மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்படும், மானிய உதவித்தொகைகள் சமத்துவ நிலையில் பிரிக்கப்படவேண்டும் என்று நிதிக்குழுவை கேட்டுக்கொள்கிறேன். இதை விரிவாக என்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளேன். மத்திய அரசின் மானியங்களில் மிகமுக்கியமான மானியத்தொகை உணவு, உரம் மற்றும் எண்ணெய்யில்தான் உள்ளது. இந்த விஷயங்களில் பல மாநிங்கள் குறிப்பாக தமிழகம் அதிக அளவு மானியத்தொகை அளிக்கப்பட வேண்டும். மாநிலத்தின் ஒட்டுமொத்த நலன்களை மனதில் கொண்டு இத்தகைய மானிய ஒதுக்கீடு இருக்கவேண்டும். தற்போது மத்திய அரசின் ஒதுக்கீடுகளால் தமிழகம் சுமைகளையும், கஷ்டங்களையும் தாக்கவேண்டி உள்ளது. தமிழகத்திற்கு 7_வது நிதிக்குழுவின்போது 7.68 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, 13_வது நிதிக்குழுவில் 4.98 சதவீதமாக குறைந்துள்ளது. 10_வது மற்றும் 11_வது நிதிக்குழுவின்படி தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சிறப்பாக செயல்படும் மாநிலமாக இருப்பதை அங்கீகரிக்கவேண்டும். ஏற்கனவே செயல்பட்டதுபோல் இல்லாமல், புதுவிதமாக மாறவேண்டும். நிதிக்குழு அனைத்து முனைகளிலும் மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும்.
தமிழகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளது. வரிவருவாய்யை ஈட்டுவதிலும், முனைப்பு காட்டி உள்ளது. அதேபோல் வளர்ச்சிக்கான செலவீனத்தில் மிகப்பெரும் திறமையை காட்டி உள்ளது. இதேபோல மற்ற திட்டங்களிலும் வெற்றிகரமாக நடைபோட்டுள்ளது. வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்பட சவால்களை சந்தித்து மாநிலத்தின் அதிகபட்சமான வளர்ச்சியை பெருவதிலும் தமிழகம் முன்னோக்கி நடைபோடுகிறது. இதற்கேற்றாற்போல வளங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக பொதுச்சேவை, நீதியை அளிப்பது, சாலை வசதிகளை மேம்படுத்துவது, குடிநீர் விநியோகத்தை சீரமைப்பது, பள்ளிகள் மற்றும் சுகாதார நிலமைகளை முன்னேற்றுவது போன்ற பல்வேறு தேவைகளை தமிழகம் நிறைவேற்றி வருகிறது. இதில் மாநிலங்களுக்கு உள்ளேயே வளர்ச்சி மேம்பாடுகளில் வேறுபாடுகள் இல்லாமல் செய்ய வேண்டியதும் உள்ளது.
தற்போது சூழ்நிலைகளில் பொருளாதார வளர்ச்சி திட்டங்களில் பெரும் சவால்களை சந்திக்கும் நிலையில் தமிழகம் உள்ளது. அதே நேரத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாகவும், மக்கள் தொகையில் வேலை செய்யக்கூடியவர்களின் வயது குழுமம் குறைவாகவும் இருக்கிறது. இத்தகைய கட்டமைப்பு சூழல் சரியாக நிருவகிக்கப்பட்டால் தான் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்லமுடியும்.
தமிழக அரசின் 2023 தொலைநோக்குத் திட்டத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அதாவது சமூகம் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பில் 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு திட்டத்தை தீட்டி உள்ளோம். இதற்கு வேண்டிய திறன் இங்கு உள்ளது. ஆகையால் இந்த வளர்ச்சியை அடைவதற்காக, மேம்படுத்துவதற்காக நிதித்துறையின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில், நிதி பரிமாற்றங்களில் பாதிப்பு ஏற்பட்டால், நீண்ட கால வளர்ச்சி நிலமையும் பாதிக்கப்படும். பழங்காலத்து வளர்ச்சியை விட தமிழகம் அதிக வளர்ச்சி அடைந்து முன்னோக்கி செல்லவேண்டும். இதற்கு நிதிக்குழு உதவி செய்யவேண்டும்.
ஒட்டுமொத்தமாக நான் என்னுடைய ஆலோசனைகளை தெளிவாக கூறவேண்டுமானால், மாநிலங்கலுக்கு நிதி வளங்களை விநியோகிக்கும் விகிதம் சமத்துவமாக இருக்கவேண்டும். கீழ்வரும் விஷயத்தில் 3_ல் ஒரு பங்கு கவனம் செலுத்தவேண்டும்.
1. 1971_ன் மக்கள் தொகையின் அடிப்படையில் விநியோகிக்கும் நடைமுறை.
2. வரிவருவாய் முயற்சி உட்பட நிதி ஒழுங்கு சீர்படவேண்டும்.
3. நிதித்திறன் கடைபிடிக்கவேண்டும்.
பல மாநிங்கள் தங்களுடைய நலன்களுக்கு ஏற்ப வழிமுறைகளை முன் வைக்கிறது. சமத்துவ அடிப்படையிலும், சமப்படுத்தும் நோக்கத்துடனும் என்னுடைய ஆலோசனைகளை நீங்கள் ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன். முற்போக்கான விதத்தில் மாற்று ஆலோசனைகளை நான் தந்துள்ளேன். மாநிலத்திற்கு உள்ளேயே மத்திய அரசின் லெவி, வாட்டு வரியை ஈட்டுவது, மத்திய சுங்க வரி மற்றும் சேவை வரி போன்றவற்றை மாநிலங்களுக்கே அளித்துவிடுவது, அதே நேரத்தில் மத்திய மாநில வரி ஈட்டும் விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துவது, இதுபோன்ற நிலமை இருந்தால் சரியாக இருக்கும்.
மக்களுக்கான குடிநீர் விநியோகம், பாசன வசதி மின்சாரம், போக்குவரத்து போன்றவற்றை கொள்கை திட்டங்களில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும். இது பல கஷ்டங்களை அளிக்கக்கூடியதுதான். ஆனால் நிதிக்குழு தன்னுடைய அரசியல் சட்ட அதிகாரத்தின்படி இவற்றை பரிசீலிக்க வேண்டும். தமிழகம் நீர் வளம் குறைவுள்ள மாநிலமாகும். மக்களுக்கு இந்த அடிப்படை தேவையை பூர்த்தி செய்யவேண்டும். ஆகையால் குடிநீர், வர்த்தக விலையுடன் கணக்கிடக்கூடாது. இது மிக முக்கியமான உணர்ச்சிகரமான இவ்விஷயத்தை நிதிக்குழு ஆலோசிக்க வேண்டும்.
இறுதியாக தமிழக அரசு தன்னுடைய நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும், சிறப்பு பிரச்சினைகளை கையாளுவதிலும் கவனம் செலுத்துகிறது. அதற்காக மாநில நிர்வாகத்தின் திறன்களை மேம்படுத்தும் 14 வகையான திட்டங்கள், மாநிலத்தின் குறிப்பான தேவைகளுக்காக 10 வகையான திட்டங்கள் உட்பட 41 ஆயிரத்தி 408.79 கோடி ரூபாயை மானியமாக அளிக்கவேண்டும். இந்த விஷயத்தில் சில முக்கியமான தேவைகளை உங்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டிலேயே மிகவும் உயர்ந்த திறன் உள்ள போலீஸ் சக்தியாக உள்ள தமிழக போலீசுக்கு சிறப்பாக செயல்பட, மாநிலத்தில் அமைதி நிலைநாட்ட போதுமான நிதி தேவைப்படுகிறது. காவல்துறையை நவீனப்படுத்தவும், தொழில்நுட்ப ரீதியாக வளர்க்கவும், அவசியம் ஏற்பட்டுள்ளது. காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர்களுடன் திறன்களை மேம்படுத்த போதுமான வீட்டு வசதி திட்டத்தை அளிக்கவேண்டும். இந்த வகையில் 3 ஆயிரத்து 825 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டும். இதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பெருநகரங்களில் வளர்ந்து வரும் குடிசை பகுதிகளை மாற்றி வீடுகளை கட்டமைக்கவும் வேண்டும். தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சி நகரங்களில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களில் குடிசைகளை மாற்றி அமைப்பது போன்ற திட்டங்களுக்காக 7 ஆயிரத்து 150 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களில் 25 சதவீத குடிசைப்பகுதிகள் மாற்றி அமைக்கப்படும்.
எரிசக்தி துறையில் புதிய பரிசாத்த முறைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். சூரிய மின்சக்தியை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். அதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சகத்தியை பெறமுடியும். இது தற்போது உள்ள 7 ஆயிரத்து 504 காற்றாலை மின்சக்தியுடன் சேர்ந்ததாகும். இவற்றால் தேசிய அளவில் மாற்று எரிசக்தி உள்ள மாநிலமாக தமிழகம் மாறும். அதற்கான நிதித்தேவைப்படுகிறது. இதையொட்டி 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் நிதியை நிதிக்குழு ஒதுக்கவேண்டும்.
தமிழகம் தற்போது குடிநீர்வள பற்றாக்குறை உள்ள பகுதியாக உள்ளது. இதையொட்டி மழைநீர் சேமிப்பு தீவிரப்படுத்தப்படவேண்டும்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் முக்கிய தேவைகளை நான் பட்டியல் கூறியுள்ளேன். நிதிக்குழு இவற்றில் கவனம் செலுத்தி கடந்த கால நிலமை போல இல்லாமல் புதிய அணுகுமுறையில் செலவீன பொருப்புகளையும், வளங்கள் தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பை அளிக்கவேண்டும். மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகளையும் சீரமைக்க வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு பாகுபாடு செலுத்தாமல் ஒரு நடைமுறை கடைபிடிக்கவேண்டும் என்பதை நீங்கள் முன்வைக்கவேண்டும்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு நீங்கள் பயணப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். மிகவிரைவில் நீங்கள் உங்களின் பரிந்துரைகளை செய்து தமிழகம் உரிய நிதி நிலமைகளை பெற ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 12 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 9 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 12 hours ago |
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறைக்கு பிறகு சித்து விடுதலை
01 Apr 2023பாட்டியாலா : கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை முடிந்து நேற்று சிறையில் இருந்து சித்து விடுதலை ஆனார்.
-
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு தற்போது இந்தியாவில் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
01 Apr 2023புதுடெல்லி : முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா
01 Apr 2023சிவகங்கை : திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்
-
இளைஞர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார்: மத்திய நிதி அமைச்சர் பேச்சு
01 Apr 2023இளைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்த வைக்கம் போராட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
01 Apr 2023திருவனந்தபுரம் : வைக்கம் போராட்டம் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம் என்றும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்றும் முதல்வர்
-
விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலப் பணிகள் 2024 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு
01 Apr 2023கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்கும் பணி ஜனவரி 2024-ல் நிறைவு பெறும் என
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் : மத்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு
01 Apr 2023புதுடெல்லி : இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் 7-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 Apr 2023சென்னை : சென்னையில் வரும் 7-ம் தேதி அ.தி.மு.க.
-
புதிய நிதி ஆண்டில் அமலானது: சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம் : வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்
01 Apr 2023சென்னை : சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தன. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.
-
3 அடுக்குகளுடன் 3,700 பேர் அமரும் வசதி: 16 ஏக்கரில் மதுரையில் அமைகிறது பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழக பொதுப்பணித்துறை தகவல்
01 Apr 2023மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரையில் 3 அடுக்குகளுடன் 16 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பி
-
பெருங்காமநல்லூர் நினைவிடத்தில் நாளை அ.தி.மு.க, சார்பில் அஞ்சலி : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 Apr 2023சென்னை : பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் நாளை 3-ம் தேதி அ.தி.மு.க.
-
இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 4.46 கோடி செலவு
01 Apr 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வெளிநாட்டு பயணங்களுக்காக இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
-
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 76 குறைப்பு
01 Apr 2023சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
-
இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
01 Apr 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள் வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர
-
‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக தைவான் சென்றார் கமல்ஹாசன்
01 Apr 2023‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
-
மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் மை டியர் டயானா
01 Apr 2023நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்
-
படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த இளையராஜா
01 Apr 2023MAA AAI புரடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
2022-23-ல் அரசுப் பணிகளுக்கான இணையவழித் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் 11.4 லட்சம்
01 Apr 2023சென்னை : 2022-2023-ம் ஆண்டில், சுமார் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியு
-
நாவல் படத்தை இயக்கும் ஐசுஜான்சி
01 Apr 2023கதை திரைக்கதை வசனம் எழுதி நாவல் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பெண் இயக்குனரான ஐசுஜான்சி.