முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் மீது புகார்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.3 - இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி என்பவர் அவதூறு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி இரு தரப்பிலும் போலீசார் விசாரணை நடத்தினர். விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை மறுத்த சீமான் தரப்பு வழக்கறிஞர் நடிகை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி விவரம் வருமாறு:-

விஜய்-சூர்யா நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் சமீபத்தில் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் இயக்குநர் சீமான் என்னை காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி பழகினார். இதனால் நெருங்கி பழகினோம். இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படிகேட்டு கொள்கிறேன் என்று தனது புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் வளசரவாக்கம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த புகார் பற்றி நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸ் ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த புகார் பற்றி சீமான் தரப்பில் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு தொடர  போவதாக கூறியுள்ளார். வழக்கறிஞர் தடா சந்திரசேகர் கூறியதாவது:-

சீமான் தனது அரசியல் நடவடிக்கைகளால் இன்னல் படும் இலங்கை தமிழர்களின் துயர்துடைக்க கடுமையாக பாடுபட்டு வருகிறார். தனது பேச்சுக்களாலும் போராட்டங்களாலும் அவர் பின்னே இளைஞர் கூட்டம் அணி திரள்கிறது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை ஒன்றையே தனது  தனது போராட்டமாக கொண்டு வாழ்ந்து வரும் சீமானுக்கு காதலிக்கவோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடவோ நேரம் கிடையாது இதுபற்றி அவர் சிந்தித்து பார்த்தது கூட கிடையாது.

சீமானுடைய புகழை கண்டு பொறுக்காதவர்கள் அவருக்கு களங்கம் கற்பிக்க இதுபோன்ற பொய் புகார்களை அளித்துள்ளனர். சீமான் திருமணம் செய்யகூட மறுத்து அரசியல் களத்தில் போராடி வருகிறார். தொண்டர்களும் நலம் விரும்பிகளும் கேட்டு கொண்டதால் திருமணம் செய்ய ஒத்து கொண்டார். மணப்பெண் போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணாக இருக்கவேண்டும் என்று கூறியதால் அவ்வாறு பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணை பேசி பெற்றோர்களும் சம்மதித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் இது போன்ற பொய்யான புகாரை விஜயலட்சுமி மூலம் கொடுத்துள்ளனர். உண்மையில்லாத ஒன்றை புகாரை கொடுத்த நடிகை விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து விஜயலட்சுமியின் புகார் பொய்யென நிரூபிப்போம் என்று கூறினார்.

இதனிடையே இந்த புகாரை விசாரித்த போலீசார் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் புகார் பற்றி இயக்குநர் சீமானிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony