முக்கிய செய்திகள்

ஒரகடம் சிப்காட் வளாகத்தில் அமைச்சர் சண்முகவேலு ஆய்வு

புதன்கிழமை, 8 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 8 - ஒரகடம் சிப்காட் வளாகத்தில் தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு திடீர் ஆய்வு செய்தார். தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு காஞ்சிபுர் மாவட்டம், ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்பகுதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள மின்னணு கடினப் பொருள் தயாரிக்கும் சான்மினா தொழிற்சாலையை பார்வையிட்டார்.  மலும் அதே பகுதியில் அமைந்துள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையான ரெனால்ட் நிஷான் தொழிற்சாலையையும் பார்வையிட்டார். தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது குறித்தும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் அதிகாரிகளுடனும் மற்றும் தொழில் முனைவோர்களுடன் தொழில்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். மேற்கூறிய ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் இரா.பெருமாள் மற்றும தொழில்துறையின் முதன்மை செயலர் டாக்டர் என்.சுந்தரதேவன், இணைச் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், சிப்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, தொழில் முனைவோர் வழிகாட்டல் துறையின் நிர்வாக உபத்தலைவர் வேல்முருகன் மற்றும் சிப்காட்டின் உயர் அலுவலர்களுக்கு உடனிருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: