முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எம்.பிக்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

புதன்கிழமை, 15 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.15 - தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. எம்.பிக்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.  முதல்வர் ஜெயலலிதா 2 பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு இல்லம் வரை அ.தி.மு.க. பிரமுகர்களும், டெல்லி தமிழர்களும் வரவேற்றனர். தமிழ்நாடு இல்லத்தில் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதாவை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கு முன்பு தமிழ்நாடு இல்லத்தில் அ.தி.மு.க. எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தம்பித்துரை, மைத்ரேயன், ஓ.எஸ். மணியன், செம்மலை, சிட்டலபாக்கம் ராஜேந்திரன் உட்பட 16 எம்.பிக்கள் பங்கேற்றனர். இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களோடு ஆலோசனை கூட்டம் நடந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்