முக்கிய செய்திகள்

ஒபாமாவை கொல்ல ஒசாமா திட்டமா? திடுக் தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.17 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை கொல்ல அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவையும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படை தலைவர் ஜெனரல் டேவிட் பெடரஸையும் கொல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒசாமாவின் அபபோபாத் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. 

ஒபாமாவும், பெடரஸூம் சேர்ந்து ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதியில் விமானத்தில் செல்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று அந்த ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவிருக்கும் பெடரஸ் மற்றும் அதிபர் ஒபாமாவை கொல்ல அல்கொய்தா விரும்பியதாகவும் அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சேனல் தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 11 ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலின் 10 ம் ஆண்டு நினைவு தினத்தன்று அமெரிக்காவை தாக்க அல்கொய்தா தலைவர் பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: