முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய் பாபாவின் தனி அறைகளில் கிலோ கணக்கில் தங்கம்...!

புதன்கிழமை, 20 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

ஐதராபாத். ஜூலை. 20 - மறைந்த சத்ய சாய் பாபாவின் தனி அறைகளில் இருந்து கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆன்மீக பணியாற்றி வந்த ஸ்ரீ சத்ய சாய் பாபா கடந்த ஏப்ரல் மாதம் 24 ம் தேதி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து இவரது தனி அறைகள் மற்றும் இவரது பிரசாந்தி நிலைய ஆசிரம சொத்துக்கள் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. சாய் பாபாவின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 40,0000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 

சாய் பாபா பயன்படுத்தி வந்த 6 தனி அறைகள் கடந்த திங்கள் கிழமைதான் முதல் முறையாக அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

இந்த அறைகளில் தங்க வலையல்கள், தங்க தோடுகள், வெள்ளி பாத்திரங்கள், வெள்ளியால் ஆன சமையல் அறை பாத்திரங்கள், வெள்ளி தட்டுக்கள், வெள்ளி கரண்டிகள், வெள்ளியால் ஆன பூஐை அறை சாமான்கள், விலையுயர்ந்த பட்டுப்புடவைகள், சட்டைகள், டிரவுசர்கள், இதர பரிசு பொருட்கள் என்று ஏராளமான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுல்ளது.

மேலும் பல அறைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன என்றும் அந்த அறைகளை திறந்தால் மேலும் பல பொக்கிஷங்கள் கிடைக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது வரை திறக்கப்படாமல் இருந்த 6 அறைகளில் 3 அறைகள் கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டதில் ரூ. 59 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திங்கள் கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 34.5 கிலோ தங்கம்,  340 கிலோ வெள்ளி  ரூ. 1.90 கோடி ரொக்கம்  ஆகியவை  கிடைத்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சிகள் மேலும் தொடரும் என்றும் திறக்கப்படாத அறைகள் விரைவில் திறக்கப்படும் என்றும் சாய் பாபா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இது வரை மூன்று முறை சாய் பாபாவின் ரகசிய அறைகள் திறக்கப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் 16 ம் தேதி முதல் முறலாக சாய் பாபாவின் அறைகள் திறக்கப்பட்ட போது ரூ. 11.56 கோடி ரொக்கமும், 98 கிலோ தங்கமும்,307 கிலோ வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 ம் தேதியும் இந்த அறைகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு இப்போது 3  வது முறையாக நேற்று முன்தினம் இந்த அறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony