முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தி.மு.க. சுவர் விளம்பரங்கள் அழிப்பு

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், மார்ச்.4 - தேர்தல் அறிவிப்பு காரணமாக திருமங்கலம் நகரில் எழுதப்பட்டிருந்த தி.மு.க. சுவர் விளம்பரங்களை அழித்திடும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டணி முடிவு, தொகுதி பங்கீடு முடிவதற்கு முன்னதாக திருமங்கலம் நகரில் பல்வேறு இடங்களில் சின்னங்களுடன் கூடிய தேர்தல் சுவர் விளம்பரங்களை தி.மு.க வினர் எழுதியிருந்தனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.

அதன் பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு மற்றும் தனியார் சுவர்களில் முறையான அனுமதி பெறாமல் எழுதப்பட்டிருந்த தி.மு.க. சுவர் விளம்பரங்களை நகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அதிகாரிகள் அழித்து வருகின்றனர். இந்த பணியின் போது ஆளும் கட்சியினரால் ஏற்படும் குறுக்கீடுகளை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பாக திருமங்கலம் நகரின் நுழைவு வாயிலான மறவன்குளம் பகுதியில் வரையப்பட்டிருந்த ஏராளமான தி.மு.க. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. இந்த பணியில் நகராட்சி சுகாதார அதிகாரி விஜயகுமார், ஆய்வாளர்கள் சரத்பாபு, ரவிசங்கர், கட்டிட ஆய்வாளர்கள் சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டனர். நகர் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகளில் விளம்பரங்கள் அனைத்தும் பாரபட்சம் இன்றி முழுமையாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!