முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரீன் புயலுக்கு சாவு எண்ணிக்கை 18 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஆக.- 30 - அமெரிக்காவில் வீசிய ஐரீன் புயல் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்லாண்டிக் கடலில் உருவாகிய ஐரீன் சூறாவளி புயல் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் மழையுடன் வீசியதில் நியூயார்க், வர்ஜீனியா, வடக்கு கரோலினா, மேரிலாண்ட், நியூஜெர்சி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் இடிவிழுந்ததிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததிலும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை காலையில் வீசிய சூறாவளி வீசியதோடு இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. இதில் ஒரு சிறுவன் உள்பட 7 பேர் பலியாகிவிட்டதாக முதலில் தகவல் வெளியாகியது. பின்னர் இந்த பலி 8 ஆகவும் அதனையடுத்து 18 ஆகவும் உயர்ந்துள்ளது என்று வாஷிங்டன்னில் அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு கரோலினாவில் 6 பேர் பலியாகிவிட்டனர். இங்குதான் முதலில் ஐரீன் சூறாவளி புயல் சனிக்கிழமை காலையில் சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. அதனையடுத்து நியூயார்க் நகரை சூறாவளி புயல் தாக்கியது. பென்சில்வனியாவிலும் புயல் மழைக்கு 4 பேர் பலியாகிவிட்டனர். மேரிலாண்டில் கனத்த மழைக்கு புகைக்கூடு இடிந்துவிழுந்ததில் ஒரு பெண் பலியானார். நியூஜெர்சியிலும் ஒருவர் பலியானார். நேற்றுக்காலை வரை சூறாவளி புயல் மற்றும் மழைக்கு 18 பேர் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ஐரீன் புயலால் அதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்த அளவுக்கு சேதம் இல்லை. ஆனால் ஐரீன் புயல் வீசியதில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். புயல் ஆபத்து இன்னனும் தீரவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் சில் பகுதிகளில் இன்னும் பல நாட்களுக்கு மின்சார சப்ளை இருக்காது. மின்சார சப்ளையை மீண்டும் தொடங்க அதிகாரிகளும், ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று அதிபர்  ஒபாமா நேற்று நியூயார்க் நகரில் உள்ள ரோஸ் கார்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கேட்டுக்கொண்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!