முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலுக்கு 80 பேர் பலி

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

லாகூர்,செப்.24 - பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 80 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி அதற்கு பலியான 80 பேருமே இதே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு முன்பு சிந்து மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இருந்தும் முதல் நாளே 55 பேர் இறந்தனர். டெங்கு காய்ச்சலை குணப்படுத்த தேவையான மருந்து மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2 ம் நாளான நேற்று முன்தினம் 25 பேர் பலியாகினர். இதையடுத்து டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. இதனிடையே இந்த காய்ச்சலை குணப்படுத்த தேவையான டெஸ்டிரான் 40 என்ற மருந்து போதிய அளவு கைவசம் இல்லை. எனவே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: