முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் கடிதம்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அக்.- 13 - கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டியிருப்பதாலும் மக்களின் மின்சார தேவை அதிகரித்து வருவதாலும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் அனல் மின்சாரம் மற்றும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பானது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. இதனை கருத்தில் கொண்டும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் இந்தியா-ரஷ்யா இடையே கடந்த 1980-ம் ஆண்டுகளில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி நெல்லைமாவட்டம் கடல்பகுதியையொட்டியுள்ள கூடங்குளத்தில் 3-கட்ட அணுமின்சார உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் கட்ட பணி முடிந்து அணுமின்சார உற்பத்தியை தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும்பட்சத்தில் அந்த அணுமின் உற்பத்தி நிலையத்தால் பாதுகாப்பு இல்லை. மக்களின் உயிருக்கு போராட்டம் என்று கருதி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆரம்பத்தில் போராட்டம் சாதாரணமாக இருந்தது. ஆனால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த போராட்டம் வலுவடைந்து ஒரு லட்சம் பேர் சேர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. அப்போதுதான் மத்திய அரசு கொஞ்சம் நினைத்து பார்க்கத்தொடங்கியது. மேலும் இந்த போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி, மக்களின் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு விளக்கினார். மேலும் போட்டக்குழுவுடன் மத்திய அரசு பிரதிநிதியும் மத்திய அமைச்சருமான நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பும் பின்பும் முதல்வர் ஜெயலலிதாவை நாராயாணசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தினர். கூடங்குளம் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் தொடர ஆதரவு கொடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மின்சாரத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் போகின்றது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளின் மூலம் 2 ஆயிரம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 925 மெகாவட் தமிழகத்திற்கு கொடுக்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தை கைவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். அணுசக்தி மின்சாரத்திற்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடமாட்டோம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். கூடங்குளம் மக்களின் கவலை எங்களுக்கு புரிகிறது. அவர்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 4 நாட்களில் எழுதி உள்ள 2-வது கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராடப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ள நிலையில் பிரதமர் இந்த பதில் கடிதத்தை எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago