முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள் 2 பேர் சஸ்பெண்டு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக். 19 - கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏக்கள் இரு நாட்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏக்கள் ராஜேஷ், ஜேம்ஸ் மேத்யூ ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்வதற்கான தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவரை சேர்த்ததில் விதிமுறை மீறப்பட்டதாக குற்றம் சுமத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இடதுசாரி ஜனநாயக முன்னணியினர் பேரவையில் கடந்த 14 ம் தேதி அமளியில் ஈடுபட்டனர். 

அப்போது எம்.எல்.ஏக்கள் ராஜேசும், ஜேம்ஸ் மாத்யூவும் பேரவை விதிமுறையை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி அவர்களை இரு தினங்களுக்கு சஸ்பெண்டு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்திற்கு இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து பேரவை தலைவர் இருக்கையை சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனர். சஸ்பெண்டு உத்தரவுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் பேரவை தலைவர் கார்த்திகேயன் அதனை ஏற்காததால் அவர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைவர்கள், இந்த போராட்டத்தை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர். முன்னதாக சரக்கு ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரி ஜனநாய முன்னணியினர் இது குறித்து சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் பேரவை தலைவர் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago