முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் மெட்ரோ ரயில்: கமல்நாத் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், அக்.21 - பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவையை மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத் நேற்று எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ரயில் போக்குவரத்தை துவக்கிவைத்தார். பெங்களூர் மெட்ரோ ரயில் கார்பரேசன் நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கியது. முதல்கட்ட பணிகள் மார்ச்- 2011 ல் முடிவடைந்தது. இதனையடுத்து பையப்பனஹள்ளி முதல் எம்.ஜி.ரோடு வரையிலான பாதையில் நேற்று போக்குவரத்து துவக்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவையை மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத் மற்றும் கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா ஆகியோர் கொடியசைத்து தொழங்கி வைத்தனர். மொத்தம் 4 பாதைகளில் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. பெங்களூரில் முதல்கட்டத்தில் 42.3 கி.மீ தொலைவுக்கு இருவழிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இதில் 8.8 கி.மீ அளவுக்கு பூமிக்கு கீழே ரயில் செல்லும். மொத்தம் 41 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் சேவை நேற்று மாலை4 மணி முதல் துவங்கியது. மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்த பட்ச கட்டணம் ரூ.10, அதிக பட்ச கட்டணம் ரூ.15 வசூலிக்கப்படுவதால் பெங்களூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை பெரிதும் பயனடையும் வகையில் அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!