முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய குழு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.21 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய 15 அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் முதல்கட்ட மின் உற்பத்தி தொடங்கும் நிலையில் உள்ளது.  ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்டதை அடுத்து கூடங்களும் பகுதி மக்கள் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். இது தொடர்பாக போராட்டக் குழுவினர் பிரதமரை சந்தித்து அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வலியுறுத்தி மனு கொடுத்தனர். அவர்களிடம் உயர்மட்டக் குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார். 

இதற்கிடையே ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து புதுடெல்லி திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில் மாநில அரசுடனும், உள்ளூர் மக்களிடமும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து பேச உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதன்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்து போராட்டம் நடத்துபவர்களை திருப்திப்படுத்த முடியும் என நம்புகிறேன் என்றார். அதன்படி இன்று 15 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு அமைத்துள்ள இந்த குழுவில் ஐதராபாத்தில் உள்ள மத்திய தேசிய நில அமைப்பு நிறுவனத்தைச் .சேர்ந்த நிலநடுக்க ஆய்வு நிபுணர் ஹரீஸ் கே.குப்தா, கடல்வளத்துறை முன்னாள் செயலாளர் முத்துநாயகம், இந்திய முன்னாள் அணு பாதுகாப்பு ஆய்வு நிறுவன நிபுணர் எம்.ஆர்.அய்யர், அடையாறு புற்றுநோய் ஆய்வகத்தைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வி.சாந்தா, முன்னாள் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.சர்மா, கல்பாக்கம் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.எம்.லீ மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபுணர் குழுவினர் கூடங்குளம் சென்று அணுமின் நிலையத்தையும் அப்பகுதியையும் ஆய்வு செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்