முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்துவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 30 - அரசு பணியாளர் ஆணையத்தில் லஞ்ச புகாரில் போலீஸ் நடவடிக்கை எடுத்ததன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. நம்பக தன்மையை இழந்து விட்டதால் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி பதில் அளிக்க டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்துவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஊழல் குற்றசாட்டிற்க்கு ஆளான தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வானய தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் பதவி காலத்தின் போது நியமனம் செய்யப்பட்ட அரசு பணிகள் அனைத்தையும் ரத்து செய்ய கோரி சென்னை ஐ கோர்ட் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசு தேர்வாணயம் அமைப்பு ஒரு அரசியல் அமைப்பு பதவியாகும். இந்த அமைப்பு அரசு பணிக்காக தகுதி வாய்ந்த நபர்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் நியமனம் செய்து வருகிறது. இதன் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி சட்டத்துக்கு புறம்பான பல ஆவணங்களை கைப்பற்றியதாகவும் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தகவல். இதை கண்டு போட்டி தேர்வுக்கு படித்து வரும் மாணவ சமுதாயத்தினரும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் அரசு பணியாளர் தேர்வானைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் மத்தியில் நம்பகதன்மை இழந்துள்ளனர். அவர்களது பதவிக் காலத்தின் போது நியமனம் செய்யப்பட்ட அரசு பணிகள் மீது சந்தேகம் எற்பட்டுள்ளது. எனவே டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுபினர்கள் காலத்தில் தேர்வு செய்து நியமிக்கபட்ட அனைத்து பணிகளையும் ரத்து செய்யுமாறு டி.என்.பி.எஸ்.சி.செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் விசாரித்தனர். அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி டி.என்.பி.எஸ்.சி.யை லஞ்ச ஒழிப்புத் துறை கண்கானிப்புக்கு உட்படுத்திய தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து தலைமை நீதிபதி கூறுகையில் அந்த வழக்குகள் அனைத்தையும் முதல் பெஞ்சுக்கு மாற்ற உத்தரவிட்டனர். மேலும் குற்றசாட்டிற்க்கு ஆளான தலைவர் உறுப்பினர் எந்த தைரியத்தின் அடிப்படையில் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த கோர்ட் விரும்பினால் லஞ்ச ஒழிப்பு விசாரணையை நாங்கள் நேரடியாக கண்காணிப்போம் என்றார். இதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி தலைவர் செல்லமுத்துக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கும் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்