முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் டாக்டர் சேதுராமன் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.- 31 - தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நேற்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 50 -க்கும் மேற்பட்ட வாகனங்களில் பசும்பொன்சென்றனர். அங்குள்ள தேவர் சமாதியில் டாக்டர் சேதுராமன் அஞ்சலி செலுத்தி கூறும்போது ஒவ்வொரு வருடமும் பசும்பொன்னுக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. அடுத்த வருடம் தேவரின் 50-ம் ஆண்டு குருபூஜை விழா, தேவர் சமாதிக்கு கும்பாபிஷேகம் செய்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு ஆகும் செலவினை எங்களின் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஏற்றுக்கொள்ளும் கடந்த வருடம் பசும்பொன்னுக்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா தேவர் சிலைக்கு தங்ககவசம் அணிவிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அதனை செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்கச்செல்லி கலைஞர் ஆட்சியில் கோரிக்கை வைத்தோம். கண்டுகொள்ளவில்லை. கனிமொழியைக்காண்பதற்கு அடிக்கடி டெல்லி செல்லும் கலைஞர், 2 கோடி தேவர் இன மக்களின் கனவை நிறைவேற்றவில்லை. இதனை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றுவார்கள் என நினைக்கிறோம். நல்ல முறையில் காவல் ஏற்பாடு செய்து கொடுத்த காவல்துறைக்கு நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் இசக்கிமுத்து,  பொருளாளர் கழுவன், மதுரை மாவட்ட செயலாளர் பகவதி, நகர் மாவட்டசெயலாளர் நாகராஜ், மாநிலதொழிற்சங்கத்தலைவர் முருகானந்தம், மதுரை மண்டலத்தலைவர் வேலுச்சாமி, தலைமை நிலையச்செயலாளர் குருசாமி, இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அரிகரபாண்டியன் உள்ளிட்ட சுமார் 500க்கும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony