Idhayam Matrimony

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் மேலும் மழை

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.1 - வங்கக்கடலில் நேற்று காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அடுத்த 3 தினங்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதுவரையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென்தமிழகம் வரை உள்ள வங்கக்கடலில் பரவி கரைந்தது.   

இந்த நிலையில் நேற்று காலை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இலங்கை முதல் வட தமிழகம் நோக்கி வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களிலும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். சிலநேரம் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். 

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பேராவூரணி, ஸ்ரீவைகுண்டம், மணிமுத்தாறு பகுதியில் தலா 9 செ.மீ மழையும், சாத்தான்குளம், திருச்செந்தூரில் தலா 8 செ.மீ, மழையும், அரிமலம், திருத்துறையப்nullண்டியில் தலா 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது. 

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலையில் நகரின் பல பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ​ மாணவிகள் சிரமப்பட்டனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொட்டும் மழையில் நனைந்தவாறு வாகனங்களில் சென்றனர். சென்னை நகரின் பல இடங்களில் பலத்தமழையால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago