பாரத ஸ்டேட் வங்கி 2 நாள் வேலை நிறுத்தம்

Image Unavailable

 

சென்னை, நவ.6 - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளை சேர்ந்த 85,000 அதிகாரிகள் வரும் 8 மற்றும் 9 ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்கின்றனர். பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் உள்ளிட்டவற்றின் 20 ஆயிரம் அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நிர்வாக உயரதிகாரிகள் மும்பையில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது. 

தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரம் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர் என்று சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ தெரிவித்தார். வரும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை என்பதால் விடுமுறை நாளாகும். அதிகாரிகளின் வேலை நிறுத்த நாட்களில் ஸ்டேட் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே ஏ.டி.எம். மையங்களையும், இன்டர்நெட் மொபைல் வங்கி சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதீப் சவுத்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ