காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம்: பாபா ராம்தேவ்

Image Unavailable

ஹோஷியாபுர், நவ. - 9 - சில வட மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில்,  பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலின் போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். 2014 ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவில் மூன்றாவது அணி ஒன்று அமைக்கப்படும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. விலைவாசி அதிகரித்துக் கொண்டே போவதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் காரணம். அத்தியாவசியப் பொருள்களின் விலையை குறைப்பதில் யாருக்குமே அக்கறை இல்லை என்றும் அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ