முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 கோடிகொடுத்த பணத்தைதிருப்பி தரவில்லை புவனேஷ்வரி ஐகோர்ட்டில்வழக்கு

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, நவ.- 12 - கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற சினிமா படத்தின் தயாரிப்பாலர் சம்பூரணத்திற்கு கொடுத்த ரூ.1 கோடி கடன் தொகையை திருப்பி கேட்டு நடிகை புவனேஷ்வரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  சென்னை அரும்பாக்கத்தில் குடியிருந்து வரும் நடிகை புவனேஷ்வரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர் மகேஷ் நடித்து வெளிவர இருக்கும் ``கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்'' என்ற படத்தை தயாரிக்க சம்பூரணம் என்னிடம் ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் தொகையை படம் வெளியிடுவதற்கு முன்பு திருப்பி கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கான உத்தரவாதத்தை முத்திரை தாள்களில் எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ``கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்'' படம் விரைவில் வெளியிட இருப்பதாக பத்திரிகைகளில் விளம்பர செய்தி வந்தது. இதை அறிந்ததும் தயாரிப்பாளர் சம்பூரணத்தை தொடர்பு கொண்டு கடனை திருப்பி செலுத்தும் படி கேட்டேன், அதற்கு அவர் முறையாக பதில் தரவில்லை. எனக்கு தரவேண்டிய கடன் தொகையை தரமறுத்தால், நான் மிகவும் பாதிக்கபடுவேன். அவர் என் கடனை திருப்பி தரும் வரை படத்தை வெளியிட தடை விதிக்கவும், என்னிடம் வாங்கிய ரூ.1 கோடியை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை சென்னை 17-வது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி சரவணன் விசாரித்து பதில் மனு தாக்கல் செய்யும்மாறு தயாரிப்பாளர் சம்பூரணத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் சார்பில் வக்கீல் சிவராமன் ஆஜரனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago