முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமிக்ஸ் புத்தகம் ரூ.10 கோடிக்கு ஏலம்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

பிளாடெல்பியா, டிச.3 - முதலில் வெளியான காமிக்ஸ் புத்தகம் ரூ. 10 கோடிக்கு ஏலம் போனது. அமெரிக்காவில் கடந்த 1938 ம் ஆண்டு முதன் முதலில் ஆக்சன் காமிக்ஸ் புத்தகம் வெளியானது. சூப்பர்மேன் சாகசங்களுடனான அந்த புத்தகம் அப்போது மிகவும் குறைவான விலையில் விற்றது. இந்த நிலையில் அந்த புத்தகம் கடந்த மாதம் 11 ம் தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. அந்த புத்தகத்துக்கு தொடக்க விலையாக ஒரு டாலர் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் அந்த புத்தகம் ரூ. 10 கோடிக்கு ஏலம் போனது. ஏலம் எடுத்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு இதே போன்று ஒரு ஆக்சன் காமிக்ஸ் புத்தகம் ஏலம் விடப்பட்டது. இது ரூ. 3 கோடிக்கு ஏலம் போனது. அப்போது அது மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த புத்தகம் ரூ. 10 கோடிக்கு ஏலம் போனதன் மூலம் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்