முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தல் விருப்பமனு செய்தவர்களிடம் ஜெயலலிதா நேர்காணல்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச் - 14 - தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் வரும் ஏப்ரல் 13 ம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்தவர்களிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் வருகிற 13.4.2011 அன்று ஒரே கட்டமாக  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.முக. பொதுச் செயலாளரும், கழக ஆட்சி மன்றக் குழு தலைவருமான ஜெயலலிதா தலைமையில் அவரது இல்லத்தில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களான அ.தி.மு.க. பொருளாளர் ஒ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அமைப்புச் செயலாளர்கள் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், சொ.கருப்பசாமி எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்டக் கழக செயலாளர் டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.பி.சையதுகான் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரி விருப்பமனு செய்திருந்தவர்களை அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நேர்காணல் கடந்த 4.3.2011 முதல் நடைபெற்று வருகிறது. இதனை அ.தி.மு.க. தலைமைக் கழக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago