முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்: விஜயகாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மார்ச்.- 14 - வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்காக உழைத்து கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தி உள்ளார்.  தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் கடந்த 2 ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அவர்களிடம் நேற்று வரை நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் நாள் நடந்த நேர்காணலின் போது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 79 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு செய்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 77 தொகுதிகளில் போட்டியிடவிருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடந்தது.
நேர்காணலில் கலந்து கொண்டவர்களுடன் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் சுந்தரராஜன், துணை செயலாளர் ஆஸ்டின் இளங்கோவன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துரையாடினர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவோர் அவரவர் குல தெய்வங்களை வணங்கி தேர்தல் பணியை தொடங்குங்கள் என்று விஜயகாந்த் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!