முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கிட்டங்கிகளில் ஒரு லட்சம் டன் தானியங்கள்சேதம் கே.வி.தாமஸ்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, டிச. - 21 - மத்திய அரசின் இந்திய உணவு கார்ப்பரேசனுக்கு சொந்தமான கிட்டங்கிகளில் சுமார் ஒரு லட்சம் டன் உணவு தானியங்கள் சேதமைடந்துள்ளாக மத்திய உணவுத் துறை இணையமைச்சர்(தனி பொறுப்பு) கே.வி. தாமஸ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.  இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி இந்திய உணவு கார்ப்பரேசன் கிட்டங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 87 ஆயிரம் டன் உணவு தானியங்கள் சேதமைடந்துள்ளன. அதிக ஈரப்பதம் தானியங்களை தொழிலாளர்கள் முறையாக கையாளமல் இருந்தது நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நாட்கள் சேமித்து வைத்திருந்தது, பறவைகள், எலிகள் உட்பட பல்வேறு காரணங்களால் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளை தடுக்க தனி அமைப்பு ஏதும் இல்லை. சேதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிட்டங்கிகளின் சுவர்களை பலப்படுத்துதல் உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் ஊர்க்காவல் படையினர், சிறப்பு போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்