முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையரிடம் அ.தி.மு.க. புகார்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 15 - டி.ஜி.பி. லத்திகா சரண் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அ.தி.மு.க. புகார் தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சென்னையில் நேற்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அவரிடம் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், டாக்டர் மைத்ரேயன், பாலகங்கா, டி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அ.தி.மு.க.  குழுவினர் சில புகார்களை தெரிவித்தனர். 

இதுகுறித்து கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது  அவர்கள் கூறியதாவது:-

தமிழக காவல்துறை டி.ஜி.பி. லத்திகா சரண் உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளானவர். எனவே, தேர்தல் சமயத்தில் அவர் டி.ஜி.பி. பதவியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினோம். இதேபோல், தமிழக உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருவதால் அவர்களையும் பதவியில் இருந்து  மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதேபோல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் குழுவினர் கூறும்போது, தேர்தலில் பணம் கொடுக்க முயற்சி நடப்பதை உறுதியாக தடுக்க வேண்டும். பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு  போட வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்று கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago