முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்தா பட அதிபர் மனைவிக்கு பிடிவாரண்டு!

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச. 29 - கந்தா சினிமா படத்தயாரிப்பாளர் மனைவிக்கு எதிரான செக் மோசடி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா. இவரது கணவர் பழனி வேலு. சினிமா படத் தயாரிப்பாளர். நடிகர் கரண் நடிக்கும் கந்தா என்ற படத்தை தயாரித்து வருகிறார். சென்னை சவுகார் பேட்டையைச் சேர்ந்த பைனான்சியர் மோகன்குமார் என்பவர் கல்பனாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ஹை டெக் காப்பர்டி நிறுவனத்தின் உரிமையாளரான கல்பனா கடந்த 2009-ல் தன்னிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதற்காக, அவர் கொடுத்த வங்கி காசோலை கணக்கு இருப்பில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.

இது குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் கல்பனா முறையாக பதில் அளிக்கவில்லை. ஆகவே, அவரை காசோலை மோசடி சட்டத்தின் கீழ் தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் 8-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது கல்பனா ஆஜராகாததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மார்ச் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago