முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே அன்னவயல் களத்தில் சிறப்பு பசுமை பயிற்சி முகாம்:

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அன்னவயல் களத்தில் சித்தர்கூடம் சார்பில் நடைபெற்ற சிறப்பு பசுமை பயிற்சி முகாமில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பசுமையாக்குதலில் சிறப்பு பயிற்சி பெற்றுச் சென்றனர்.
புள்ளி மாணவ,மாணவியருக்கு கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிடும் வகையில் சித்தர்கூடம் அமைப்பின் சார்பில் பசுமையை உருவாக்குவோம் என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் அதிகளவு மரக்கன்றுகளை நடவு செய்து திருமங்கலம் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பசுமையாக்கிடும் வகையில் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.மீனாட்சிபுரத்தில் உள்ள அன்னவயல் களத்தில் பள்ளி மாணவ,மாணவியர்கள் மற்றும் இயற்கையை விரும்பிடும் சமூக ஆர்வலர்களுக்கான சிறப்பு பசுமை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தேசிய பசுமைப்படை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ப.ஹரிபாபு,ஊர்வனம் வனஉயிர்கள் பாதுகாப்பாளர் விஷ்வா,அமிர்தம் யோகா மைய பயிற்சியாளர் பி.இளங்கோ,மதுரை காமராசர் உறுப்புக்கல்லூரி பேராசிரியர் வே.மீனா,அன்னவயல் இயற்கை விவசாயி காளிமுத்து,இயற்கை ஆர்வலர்கள் பசுமை இந்தியா நாகராஜன்,கார்த்திகேயன் பார்கவிதை,சிவரக்கோட்டை அய்யா ராமலிங்கம்,நன்றி மறவேல் மாரிக்குமார்,கனவு ஆசிரியர் முத்துகிருஷ்ணன்,காட்சன் சாமுவேல்,மண்வாசணை மேனகா உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பசுமை பயிற்சியளித்தனர்.
அப்போது பசுமையாக்கல் குறித்து மாணவ,மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கலை நிகழ்ச்சிகளும்,செய்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்தர்கூடம் பசுமை களப்பணி நிர்வாகி த.சோம்நாத், அன்னவயல் இயற்கை விவசாயி காளிமுத்து ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர். இது போன்ற முகாம்கள் மூலம் திருமங்கலம் பகுதி முழுவதிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை பிரதேசமாக மாற்றிடுவோம் என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்த பின்னரே கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து