எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்தியை திணிக்கும் மும்மொழி திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு என்று உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்ட தினகரன் பத்திரிகைக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 5.6.2019 அன்று தனது சுட்டுரை பக்கத்தில், நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு ஆதரவாக "மற்ற மாநிலங்களில் தமிழ்மொழியை விருப்பப்பாடமாகக் கொண்டு வரவேண்டும். இது உலகத்தின் மிகப் பழமையான தமிழ்மொழிக்கு செய்யப்படும் சேவையாகக் கருதப்படும்" என மற்ற மாநில மக்களும் தமிழ்மொழியைப் படித்து பயன்பெற வேண்டும், தமிழ்மொழி மற்ற மாநிலங்களிலும் விரிந்து பரவி, செழித்து வளர்ச்சியடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்தி பதிவிட்டிருந்தார்.
இந்த செய்தியை 6.6.2019 நாளிட்ட "தினகரன்" நாளிதழ் தனது முதல் பக்கத்தில் "இந்தியை திணிக்கும் மும்மொழி திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு: தலைவர்கள் கடும் எதிர்ப்பு" என்ற தலைப்பில் உண்மைக்கு புறம்பாக முதலமைச்சர் புகழுக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது.எனவே, முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக, தவறான நோக்கில் உண்மையைத் திரித்து, பதிவின் நேர்மையான உயரிய எண்ணத்தையும், உண்மை நிலையையும் ஆராயாமல் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட "தினகரன்" நாளிதழ் ஆசிரியர், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


