முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 14-வது ஆலோசனை கூட்டம்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 14-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நீர்வளத்துறை அமைச்சகத்தின் சேவா பவனில் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை காவிரி மேலாண்மை ஆணையம் இறுதி செய்துள்ளது. இந்த நீரை கர்நாடகா வழங்குவதை உறுதிப்படுத்த மாதந்தோறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும். கடந்த மே மற்றும் ஜூன் மாதம் ஆணைய கூட்டம் நடந்தது. ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. மற்றும் ஜூலையில் 31.2 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை பின்பற்றி கர்நாடக அரசு முறையாக நீர் வழங்கவில்லை. நடப்பு ஆண்டிற்கான ஆணையத்தின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் டெல்லியில் ஜூலை மாதம்  25-ம் தேதி நடந்தது. 

இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 14-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நீர்வளத்துறை அமைச்சகத்தின் சேவா பவனில் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து