எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அமித் பங்கல் பெற்றுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் 52 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் அமித் பங்கல் கலந்து கொண்டார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அமித் பங்கல் கஜகஸ்தானைச் சேர்ந்த சாகேன் பிபோசிநவ்-ஐ எதிர்கொண்டார். இதில் 3-2 என பங்கல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பங்கல் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஷகோபிடின் ஜொய்ரோவ்-ஐ எதிர்கொள்கிறார். மற்றொரு இந்திய வீரரான கவுசிக் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார். இதற்கு முன் விஜேந்தர் சிங் (2009), விகாஸ் கிஷன் (2011), ஷிவ தபா (2015), கவுரவ் பிதுரி (2017) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


