முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் நேர்மையான அரசு இருக்கும் வரை தனியார் பள்ளி கல்வி கட்டணம் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேர்மையான எங்களது ஆட்சி டெல்லியில் இருக்கும் வரை, தனியார் பள்ளிகள் அரசு அனுமதியில்லாமல் பள்ளி கட்டணத்தை உயர்த்த முடியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘டெல்லியில் நேர்மையான அரசு இருக்கும்வரை பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. டெல்லியில் உள்ள எந்தவொரு தனியார் பள்ளியும் தன்னிச்சையாக கல்வி கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது. கடந்த ஐந்து ஆண்டுகளை போன்று கட்டணத்தை கட்டுக்குள் வைப்போம்’’ என்றார்.

கடந்த ஏப்ரல் 2018-ல் கல்வி இயக்குனரகம் அனுமதியின்றி தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்வி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வருடம் மே மாதம் 575 தனியார் பள்ளிகள் அதிகமாக வசூலித்த தொகையை திருப்பி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து