எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் - கேரளா இடையே நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து விவாதிக்க கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் விரைவில் முதல்வர் பழனிசாமியை சந்திக்க இருப்பதாக அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னையில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இரு மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரியில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருந்தினர் மாளிகை கட்டுவதற்கு கேரளா வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். கீழடி அகழாய்வு மற்றும் கேரள மாநிலத்தில் நடைபெறும் முசிலீப்பட்டினம் அகழாய்வு ஆகியவை குறித்து இரு மாநில அரசுகளும் கலந்து ஆலோசித்து செயல்படுவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இரு மாநில எல்லையில் உள்ள கண்ணகி கோயிலுக்கு பாதை அமைக்க இரு தரப்பு அதிகாரிகளும் ஆலோசனை நடத்திடவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில கலாச்சாரத்தை மேம்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்ததாக அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் இரு மாநிலங்கள் இடையே உள்ள பிரச்சனைகள் அனைத்தும் வரும் காலங்களில் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்வது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


