எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணல் காந்தியடிகளின் 73-வது நினைவுநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர், சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு இன்று (30.01.2020) காலை 8.30 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, அண்ணல் காந்தியடிகளை பெருமைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அன்னாரது நினைவு தினமான ஜனவரி 30-ம் நாள் அனுசரித்து வருகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். இவரது துணைவியார் கஸ்தூரிபாய் ஆவார். காந்தியடிகள், தனது 18-ம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தியடிகள், 1893-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பயணமானார். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென்னாப்பிரிக்காவில் மக்களின் உரிமைக்காகப் போராடிய காந்தியடிகள், இந்தியா திரும்பியதும் இந்தியர்களின் சுதந்திரத்திற்கானப் போராட்டத்தைத் தொடங்கினார். காந்தியடிகளுக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1924-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தியடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 1930-ம் ஆண்டில், ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக்கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தியடிகள் பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தியடிகள், மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப்பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைபயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தியடிகள், அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942-ம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்திலும் காந்தியடிகள் பெரும் பங்கு வகித்தார்.அண்ணல் காந்தியடிகள், சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடைபிடித்தார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். காந்தியடிகளுக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். மகாத்மா காந்தியடிகள் 1948-ம் ஆண்டு, ஜனவரி 30-ம் நாள் அன்று தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கயிருந்த டெல்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு நாளை (இன்று)(30.01.2020) காலை 8.30 மணியளவில் கவர்னர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.