முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை எதிர்கொண்டு தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும்: கவர்னர் பன்வாரிலால் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 25 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

இந்தியளவில் கொரோனா வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, சட்டப்பேரவையில்,  110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அ.தி.மு.க. அரசு, தொடர்ந்து  தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது  என்றார். இந்நிலையில், ஊரடங்கு குறித்து பேசிய தமிழக கவர்னர்பன்வாரிலால் புரோகித், பிரதமரின் 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடித்து மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான சவாலை தமிழக மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வார்கள் என நம்புகிறேன். கொரோனாவை தடுக்கும் சவாலை எதிர்கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும். மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் மட்டும் தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி வெளியே நடமாடும் மக்களால் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கவர்னர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து