எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப் போகிறோம் என கூறி இருந்தார். இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறும் போது,
தயவு செய்து இந்த கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இது உலக அளவில் உங்களிடம் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. தயவு செய்து கொரோனாவை அரசியல் மயமாக்குவதைத் தவிர்த்திடுங்கள். இந்த ஆபத்தான வைரஸைத் தோற்கடிக்க நாட்டின் ஒற்றுமை மிக முக்கியமானதாக இருக்கும். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நாங்கள் இரவும் பகலும் உயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து பணி புரிந்து வருகிறோம் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என கூறினார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்பின் தலைவர்தான் அரசியல் செய்கிறார். கடந்த ஆண்டு நாங்கள் 45 கோடி டாலர் உலக சுகாதார அமைப்புக்காக செலவு செய்தோம். அதற்கு முன் லட்சக்கணக்கிலான டாலர்களைச் செலவு செய்துள்ளோம். அதைப் பயன்படுத்தி நன்றாகச் செயல்பட்டார்கள். ஆனால் சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டு தற்போது அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். சீனா 4.20 கோடி டாலர்தான் உலக சுகாதார அமைப்புக்காக செலவிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது. இது சரியல்ல. இது நியாயமானதாக எங்களுக்குத் தெரியவில்லை. உலகத்துக்கும் இது நியாயமானது இல்லை. உலக சுகாதார அமைப்பு தங்களுக்கு இருக்கும் சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தினாலும் அனைவரையும், அனைத்து நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால் அது போன்று நடத்தியதாகத் தெரியவில்லை. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் சில முடிவுகள் எடுக்கப் போகிறோம். அமெரிக்கா மட்டும் அதிகமான நிதி செலவிடும். மற்ற நாடுகள் குறைவாக நிதி செலவிடுவது சரியல்ல.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.


