எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்துவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவலாவில் 9 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சித்தாரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், பெருஞ்சாணி மற்றும் புத்தன் அணைக்கட்டு பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும், பேச்சிப்பாறை, சிவலோகம், நாவலூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதே போல், சுருளகோடு பகுதியில் 4 செ.மீ மழையும், கொளச்சல், தக்களை, எரானியேல், திருச்சி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும், பாபநாசம், மனிமுத்தாறு, மைலாடி ஆகிய பகுதிகளில் தலா செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


