எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-க்கு கூடுதலாக சென்றது. இதனால், நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று மிக அதிகபட்ச அளவாக ஒரே நாளில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,264ல் இருந்து 1,321 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கொரொனா தொற்றில் இருந்து நேற்று 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


