முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத்தின் புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழ்நிலை

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

குவைத் : வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் குவைத் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சட்ட மசோதாவால், இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

கொரோனா தாக்கத்தால் பிற நாடுகளை போலவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், குவைத் அரசு சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

43 லட்சம் பேரை கொண்ட குவைத் மக்கள் தொகையில், வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள்தான் அதிகம். குவைத் அரசின் புதிய சட்டம் இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க வகை செய்கிறது.

அதன்படி 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறரை முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது, மீதமுள்ள 7 முதல் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இந்தியர்களை போலவே மற்ற வெளிநாட்டினருக்கும் இந்த மசோதாவில் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வசிக்கும் எகிப்தியர்களின் எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து