முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோழிக்கோடு விமான விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கோழிக்கோடு : கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் இருந்து வந்திறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 

இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன.  காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதையடுத்து கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கெரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலப்புரம் மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து