எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, உலகில் உள்ள அனைவருக்கும் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி போடுவதற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா கூறியதாவது:-
மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை.
கொரோனாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தேவைப்படும். 35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
கொரோனா பாதிப்பு தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பூசிக்காக உலகம் நம்பிக்கையுடன் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.
ஆனால் இப்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை நான் கேள்விப்பட்டதில்லை. மேற்கு இந்திய நகரமான புனேவை மையமாகக் கொண்டு செயல்படும் சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. அதில் பாதி இந்தியாவுக்கு அளிக்க உறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


