எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளிலும் இறுதியாண்டு தவிர அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளைத் திறக்கவும், விருப்பமுள்ள மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 9-ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளிகளைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில்,
கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட 4-வது பொதுமுடக்கத் தளர்வு ஆணையில் 50 சதவீத ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மட்டும் இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 21-ம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில், 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டது. அதைப் பரிசீலித்த மாநில அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் 10-12 வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கிறது. வரும் அக்.1-ம் தேதி முதல் ஏற்கெனவே, மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படும். இது நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பொருந்தாது. மற்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 10 - 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும். 10 - 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்), இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும். பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும்.
10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து செல்லலாம். பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


