எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புவனேஸ்வரம் : நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிசா கடற்கரையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்தியா - ரஷ்யா கூட்டு இணைப்பில் நீண்டதூரம் சென்று இலக்கைத் தாக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை நேற்று (புதன்கிழமை) காலை ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது.
பாலசூர் மாவட்ட கடற்கரைப் பகுதியில் தனி ஏவுதள வாகனம் மூலம் நேற்று காலை 10.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை 400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று வெற்றிகரமாக இலக்கை அடைந்தது. இதற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் சோனிக் கப்பல் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூலப்பொருள்கள் இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவின் பாதுகாப்புத்துறை மேலும் பலம் பெற்றுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருளை கொண்டுதயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள். உள்நாட்டு எரிபொருள் பயன்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் கப்பல் ஏவுகணையின் மூலம் பாதுகாப்புத்துறைக்கான உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


