முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தணிக்கை தேவைப்படுவோருக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் மேலும் நீட்டிப்பு

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தணிக்கைக்கு தேவைப்படும் வரி செலுத்துவோருக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர்  வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, ஜூலை மாதம் 31-ம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு, கடைசியாக அக்டோபர் 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் தங்கள் கணக்குகளைத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய, வரி செலுத்துவோருக்கு (அவர்களின் கூட்டாளர்கள் உட்பட) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.  

வரி தணிக்கை அறிக்கை, சர்வதேச / குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ. ஒரு  லட்சம் வரை சுய மதிப்பீட்டு வரி செலுத்த வேண்டியவர்களுக்கு, வரி செலுத்தும் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து