எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய் : துபாயில் அடுத்த மாதம் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று பேசுகிறார்.
இது குறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது 12 வயதில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி ஒரு பெண்ணாக பள்ளிக்கு சென்றதால் தலிபான் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இந்த சம்பவம் அவர் ஒரு போராளியாக மாற வித்திட்டது. அதன்பின் லண்டனில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு உலக அளவில் பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக இளம் வயதில் போராட ஆரம்பித்தார். இதற்காக தன் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவினார். தொடர்ந்து அவருக்கு 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சார்பில், துபாய் கலாசாரம் மற்றும் கலை ஆணையத்தின் ஆதரவுடன் இலக்கிய திருவிழா நடத்தப்பட உள்ளது. வரும் ஜனவரி 29-ம் தேதி ஜமீல் கலை மையத்தில் தொடங்கும் இந்த விழா பிப்ரவரி 13-ம் தேதி அல்செர்கல் அவென்யூ வளாகத்தில் நிறைவடைகிறது. இந்த விழாவில் இந்திய எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் சத்யார்த் நாயக் கலந்து கொண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து பேசுகிறார்.
மேலும் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் நாவலாசிரியர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அவ்னி தோஷி உள்ளிட்ட பல்வேறு படைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்ற இளம்பெண் மலாலா கலந்து கொண்டு பேசுகிறார். இதில் உலக அளவில் பெண்களின் நிலை, அவர்களது முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து பேசுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.