முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ராஜேஷ் மனைவி மாரடைப்பால் காலமானார்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - பிரபல நடிகர் ராஜேஷ் மனைவி மாரடைப்பால் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது (49). ``கன்னிப்பருவத்திலே'' படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். இவர் தனது அக்கா மகள் ஜோன் செல்வியாவை 83-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு  திவ்யா என்ற மகளும், திலீப் என்ற மகனும் உள்ளனர்.

குடும்பத்துடன் ராஜேஷ் ராமாபுரம் கோத்தாரி நகரில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் ஜோன் செல்வியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தூக்கத்திலேயே அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவத்தால் நடிகர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ராஜேஷ் மனைவியின் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. திரை உலகத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து மலர் வளையம் வைத்து ஜோன் செல்வியா உடலுக்கு  அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜோன் செல்வியாவின் உடல் இன்று மாலை 3.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கத்திலுள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago