முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க பெங்களூர் அணியும் நன்கொடை கேப்டன் விராட் கோலி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      விளையாட்டு
Image Unavailable

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க பெங்களூர் அணியும் நன்கொடை வழங்க முடிவெடுத்துள்ளதாக கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை உச்சமடைந்து 3,689 ஆக அதிகரித்துள்ளது, இந்நிலையில் நாடு முழுதும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசு தரப்பிலும் தனியார் தரப்பிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் சற்று குறைவாக 3.92 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல் அணிகளும் உதவிகளை அறிவித்துள்ளன, ஐ.பி.எல் ஆடும் வீரர்களும் அறிவித்துள்ளனர், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஓய்வு ஆன வீரர்களும் பல்வேறு அறக்கட்டளை மூலம் உதவிகள் வழங்கியுள்ளனர். இப்போது மல்லையாவின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆக்சிஜனுக்கான ஆதரவாக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதியுதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. இதனடிப்படையில் பெங்களூர் அணி ஒரு சிறப்பு நீல சீருடையுடன் இறங்கி ஆடவுள்ளது. பிறகு கையெழுத்திட்ட அந்த சீருடையை ஏலம் விட்டு நிதி திரட்டி கோவிட் உதவி செய்யவுள்ளனர்.

இது தொடர்பாக பெங்களூர் வெளியிட்டுள்ள வீடியோவில் விராட் கோலி அடிமட்ட அளவில் எப்படி உதவுவது என்பதில் கவனமான விவாதங்கள் நடந்து வருகின்றன என்றார்.

“சுகாதார உள்கட்டமைப்பில் உடனடியாக உதவி தேவைப்படும் முக்கியப் பகுதிகளை பெங்களூர் அடையாளம் கண்டுள்ளது. பெங்களூரு ஆக்சிஜன் நிலவரம் உள்ளிட்ட நிலவரங்களை அவதானித்து வருகிறோம். இதற்காக நிதி பங்களிப்பு, நன்கொடை செய்யவிருக்கிறோம்.

வரவிருக்கும் போட்டிகளில் இதற்காகவே பிரத்யேகமாக நீல நிற உடையில் இறங்குகிறோம். இதன் மூலம் நம் கொரோனா போராட்டத்தில் முன்களப் போராளிகளுக்கு மரியாதை செலுத்துகிறோம். பிபிஇ கவச உடையை அணிந்து கொண்டு அவர்கள் கடந்த ஆண்டு முதல் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர்” என்று கூறியுள்ளார் விராட் கோலி.

மேலும் அந்த சீருடையில் வீரர்கள் கையெழுத்திட்டு ஏலம் விட்டு பணம் திரட்டவுள்ளதாகவும் விராட் கோலி தெரிவித்தார். அனைவரும் வீட்டிலேயே இருங்கள், வாக்சின் போட்டுக்கொள்ளுங்கள் என்கிறார் விராட் கோலி. இன்று பெங்களூர் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் நன்கொடை அளிக்க பாண்டியா சகோதரர்கள் நேற்று 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நாட்டின் கிராமப்புறங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து