எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கடலூர் : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் கடந்த 2019 டிசம்பர் மாதம் நடந்தது. இதில் ஜெயலட்சுமி என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து விஜயலட்சுமி என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார்.
தேர்தல் முடிந்து கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது, ஜெயலட்சுமி 2860 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜயலட்சுமி 1179 வாக்குகள் பெற்றிருந்தார். வெற்றி பெற்றவர் ஜெயலட்சுமி என அறிவிப்பதற்கு பதிலாக தேர்தல் அதிகாரிகள் குழப்பத்தில் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினர்.
இது தொடர்பான வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், மஞ்சுளா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்து, அவரது பதவியேற்புக்கான நடைமுறைகளை முடிக்க மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பதவி ஏற்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமிக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தனர். தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றும் 17 மாதங்களுக்கு பின் தலைவராக பதவி ஏற்றார் ஜெயலட்சுமி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


