எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிராஸ் ஐலட் : மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 322 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
பேட்டிங் தேர்வு
கிராஸ் ஐலட்டில் நடைபெறும் இந்த டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் மே.இ. தீவுகள் அணி 40.5 ஓவர்களில் 97 ரன்களுக்குச் சுருண்டது. தெ.ஆ. அணியின் என்கிடி 5 விக்கெட்டுகளையும் அன்ரிக் நோர்கியா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
டி காக் அபாரம்...
இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் நாள் முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 34, குயிண்ட டி காக் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 170 பந்துகளில் 141 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் டி காக். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில், 96.5 ஓவர்களில் 322 ரன்கள் எடுத்தது.
143 ரன்கள்...
முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் பின்தங்கிய மே.இ. தீவுகள் அணி, 2-ம் நாள் முடிவில் 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. சேஸ் 21, பிளாக்வுட் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 143 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளதால் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது மே.இ. தீவுகள் அணி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


