முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் ரஜினிகாந்த் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அமெரிக்கா செல்லவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.

விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்து விடுவார் என கூறப்படுகிறது. அண்ணாத்த படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துக்கு  உடல்நிலை சரியில்லாத போது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். அமெரிக்காவில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து விட்டதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார்.

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். மத்திய அரசும் அனுமதி வழங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.  ரஜினிகாந்த் வரும் 20-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார் . இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ரஜினிகாந்துடன்  அவருடைய குடும்பத்திலிருந்து யார் செல்லவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. யாரேனும் ஒருவர் மட்டும் செல்வார் எனக் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் ஹாலிவுட் படத்துக்கான படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். அவரோடு குடும்பத்தினரும் இருக்கிறார்கள்.

ஆகையால், ரஜினிகாந்த்  அமெரிக்காவுக்கு வந்தவுடன் மகள் ஐஸ்வர்யா தனுசும் இணைந்து கொள்வார்.  அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டுதான் ரஜினிகாந்த் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து